இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்க விடுத்துள்ள முக்கிய செய்தி..!

 இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்க விடுத்துள்ள முக்கிய செய்தி..!


இலங்கையினால் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் பல்வேறு அரசாங்கங்களினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய பிரேரணை வெளிக்காட்டியுள்ளது. 

வலுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை விரும்பும்பட்சத்தில், முதலில் கடந்த காலத்தின் வலி மிகுந்த நிகழ்வுகளுக்குத் தீர்வு வழங்கவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 46/1 பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது, நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுவதற்குத் தற்போது இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

அதுமாத்திரமன்றி கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் பல்வேறு அரசாங்கங்களினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதையும் இது வெளிபடுத்தியுள்ளது.

உறுதியானதும் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்ததுமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை விரும்புமேயானால், முதலில் கடந்த காலத்தின் வலிமிகுந்த விடயங்களுக்குத் தீர்வு வழங்குவதுடன் அனைத்துப் பிரஜைகளினதும் உரிமைகளை உறுதிசெய்ய வேண்டும். இணையனுசரனை நாடு என்ற வகையில் இலங்கையில் நிலைபேறான அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கின்றது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.