நாளை முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை.

 நாளை முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை.


 நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இது தொடர்பில் தெரிவித்துள்ளது. 

அதன்படி ஒரு தடைவ மாத்திரம் பாவித்து வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியான பெட் போத்தலுக்கு Pநுவு டிழவவடநள (Pழடலநுவாலடநநெ வுநசநிவாயடயவந) தடை விதிக்கப்படவுள்ளது. 

அதேபோல் 20 மைக்ரோ கிராமுக்கு குறைவான லஞ் சீட், செஷே பெக்கட்ஸ் (உணவு மற்றும் மருந்து அல்லாத) கொட்டன் பட், ( வைத்திய தேவைக்காக பயன்படுத்தப்படாத) மற்றும் காற்று நிரப்பக்கூடிய பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களும் தடை செய்யப்படவுள்ளன. 

நிறுவனங்கள் பல முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மேற்படி பொருட்களை நாளை முதல் தடை செய்வதாக சுற்றுச்சூழல் அமைச்சர் நேற்று (29) நடத்திய ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார். 

தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட்களின் விற்பனை கருதி மூன்று மாத காலத்தை சலுகை காலமாக வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். 

இது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.