பாடசாலை நுழைவாயிலில் தாயையும், மகளையும் தாக்கிய காட்டு யானை.

 பாடசாலை நுழைவாயிலில் தாயையும், மகளையும் தாக்கிய காட்டு யானை.


பொலன்னறுவை − தெஹியத்தகண்டி பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகிய தாய் மற்றும் மகள் ஆகியோர் சிகிச்சைகளுக்காக தெஹியத்தகண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளது.

சந்தகலதென்ன பாடசாலை நுழைவாயிலுக்கு அருகிலேயே காட்டு யானை இவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் 2ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி மற்றும் 25 வயதான அவரது தாய் ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெஹியத்தகண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.