மக்களை நசுக்கி ஒடுக்காதீர் -அரச அதிகாரிகளுக்கு கோட்டாபய அறிவுறுத்தல்.

 மக்களை நசுக்கி ஒடுக்காதீர் -அரச அதிகாரிகளுக்கு கோட்டாபய அறிவுறுத்தல்.


மக்களுக்கான சேவையின்போது அவர்களை சட்டத்தை காட்டி நசுக்கி ஒடுக்காதீர் என அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ஆலோசனை வழங்கியுள்ளார்.

கங்கைகளை பாதுகாப்போம் என்ற திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

அரச ஊழியர்கள் பொது மக்களுக்காகவே செயற்படுகின்றனர். அதனால் மக்களை நசுக்கி ஒடுக்கி சட்டத்தை பாதுகாப்பதில் பயனில்லை.

எனவே சட்டத்தை பிரயோசனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"கிராமத்தில் மக்கள் ஒருபோதும் காடுகளை அழிப்பதில்லை. அவர்கள் சுற்றாடலை பாதுகாப்பர். அந்த மக்களை வாழச்செய்ய அபிவிருத்தி அவசியம். அது நிலையான அபிவிருத்தியாக இருக்க வேண்டும்.

மக்களுக்கு வழிகாட்டும் வகையில் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்பதை எமது அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும். நாம் யாருக்கு சேவை செய்கிறோம் என்பதை கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும். நாம் சேவை செய்வது மக்களுக்காக. அதனால் மக்களை நசுக்கி ஒடுக்கி சட்டத்தை செயற்படுத்துவதில் பயனில்லை. சட்டத்தை செயற்படுத்தும் போது செயற்பாட்டு ரீதியில் சிந்திக்க வேண்டும். வேலை செய்யாமல் இருப்பது இலகு. ஆனால் வேலை செய்வது கடினம். அதற்கு அர்ப்பணிப்பு தேவை" என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.