இலங்கை தொடர்பில் இன்று இடம்பெற இருந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.

 இலங்கை தொடர்பில் இன்று இடம்பெற இருந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த

வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பிலேயே இந்த வாக்கெடுப்பு இன்றைய தினம் நடத்தப்படவிருந்தது.

ஜெனீவாவில் தற்பொழுது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது.

எனினும் நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளினால் இந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக அதாவது இலங்கைக்கு எதிராகவும் நாடுகள் வாக்களிக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக ஜெனீவா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.