சிகை அலங்கார நிலையத்தில் நுழைந்து உரிமையாளரை, கத்தியால் குத்தி கொள்ளையடித்த பெண் கைது.

 சிகை அலங்கார நிலையத்தில் நுழைந்து உரிமையாளரை, கத்தியால் குத்தி கொள்ளையடித்த பெண் கைது.


கட்டுநாயக்கவில் உள்ள பிரபல சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் பலவந்தமாக நுழைந்து கொள்ளையடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் உரிமையாளரை கத்தியால் குத்தியதுடன், அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையும் கொள்ளையடித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வட்டரெக்க பானலுவ பிரதேசத்தை சேர்ந்த சந்தமாலி பிரியங்கிக்கா என்ற 34 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணுடன் வந்த இன்னொருவரை பொதுமக்கள் தாக்கியமையினால் வாக்குமூலம் வழங்க முடியாத ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.