காத்தான்குடியில் கடைக்குச் சென்ற யுவதியை மோட்டார் சைக்கிளில் பலாத்காரமாக ஏற்றிச் சென்று கொள்ளை...!

 காத்தான்குடியில் கடைக்குச் சென்ற யுவதியை மோட்டார் சைக்கிளில் பலாத்காரமாக ஏற்றிச் சென்று கொள்ளை...!


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு வாங்குவதற்காகச் சென்ற யுவதி ஒருவரை வற்புறுத்தி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பூட்டி வைத்து நண்பனுடன் இணைந்து யுவதியின் தங்க சங்கிலியை அபகரித்து தப்பியோடிய சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதுடன் தங்கச் சங்கிலியையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 20 நாட்களுக்கு முன்னர் காத்தான்குடி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் உணவு வாங்கச் சென்ற நாவற்குடாவைச் சேர்ந்த 18 வயது யுவதியுடன் உரையாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த உணவகத்துக்கு உணவு வாங்குவதற்காக குறித்த யுவதி அடிக்கடி செல்வதை அவதானித்த சந்தேக நபர்களில் ஒருவர், அவரை பின் தொடர்ந்த நிலையில், சம்பவதினமான திங்கட்கிழமை யுவதி கடைக்கு சென்றபோது அவரை பின் தொடர்ந்து சென்று வீட்டில் இறக்கி விடுகிறேன், மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு வற்புறுத்தி மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளார்.

பின்னர் மட்டக்களப்பு ரயில்வேக்கு சொந்தமான பாழடைந்த விடுதிக்கு கொண்டு சென்று அறையில் யுவதியை பூட்டி வைத்துவிட்டு கையடக்க தொலைபேசி ஊடாக தனது நண்பனை அங்கு வருமாறு வரவழைத்து நண்பனிடம், யுவதியிடம் உள்ள பணத்தை வாங்குமாறு தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதியிடம் பணம் தருமாறு கேட்ட நிலையில் யுவதி பணம் இல்லை என்றபோது அவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதி அரை மணி நேரத்தின் பின்னர் விடுதியை விட்டு வெளியே வந்தபோது யாரையும் காணாத நிலையில் அங்கிருந்து தப்பி வீட்டுக்குச் சென்று தாயிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் முகம்மட் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட விசாரணையையைடுத்து சந்தேக நபர்களைக் கைது செய்து கொள்ளையிட்ட தங்கச் சங்கிலி, கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், இரு கையடக்க தொலைபேசிகள் என்பனவற்றை கைப்பற்றினர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.