இலங்கை மக்களின் உப்பு பாவனையினால் தொற்றா நோய் அதிகரிப்பு.

 இலங்கை மக்களின் உப்பு பாவனையினால் தொற்றா நோய் அதிகரிப்பு.


உப்பு பாவனையின் உண்மையான பாதிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, உலகம் பூராவும் உப்பு பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் சர்வதேச வாரம் இன்று முதல் மார்ச் 14-ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் உப்பு பாவனை தொடர்பாக முறையான கவனம் செலுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோயால் ஏற்படுகின்றன. அவற்றில் 34 வீதமானவை இருதய மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்களினால் ஏற்படுகின்றன. அதாவது, இந்த மரணங்கள் இருதயநோய், பக்கவாதம், அதி உயர் குருதி அழுத்தம் போன்றவற்றினால் இடம்பெறுகின்றன. இவற்றுள் மிகவும் அவதானிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், அதி உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதற்கான பிரதான காரணம், அதிகமாக உணவில் உப்பை பயன் பயன்படுத்துவதாகும். ஒருவர் நாளொன்றிற்கு எடுக்க வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் (ஒரு தேக்கரண்டி அளவு) என்பதாக உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. ஆனால் இலங்கையில் ஒருவர் நாளொன்றிற்கு 9 கிராம் தொடக்கம் 12 கிராம் வரையிலான அதிகளவான உப்பை பயன்படுத்துகின்று.

விசேடமாக உப்பு பாவனையைக் குறைப்பதனால் ஒரு ஆண்டில் உலகில் ஏற்படுகின்ற மரணங்களில், 2.5 மில்லியன் மரணங்களை குறைக்கலாம் என்றும் இந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.