போதைப்பொருளுடன் கேரளாவில் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை படகுகள்.

 போதைப்பொருளுடன் கேரளாவில் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை படகுகள்.


 போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையின் பதிவு இலக்கத்தை கொண்டிருந்த மூன்று படகுகள் கேரள கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

இதன் போது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

மேலும் 7 பேர் கடலில் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த படகுகளில் இருந்து 200 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள், 60 கிலோ கிராம் ஹசீஸ் மற்றும் மேலும் சில உபகரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

படகுகளில் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி இதுவரை கணிப்பிடப்படவில்லை என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.