கலப்பட தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினால் ஏற்படக் கூடிய நோய்கள் தொடர்பான விளக்கம்.

 கலப்பட தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினால் ஏற்படக் கூடிய நோய்கள் தொடர்பான விளக்கம்.


அப்லடொக்சின் திரவம் கலக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யை

 உணவுப் பாவனைக்கு எடுத்துக்கொண்டால் குடல் புற்றுநோய் ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகமென உடல்சார் விசேட வைத்தியர் கலாநிதி அர்ஜுன டி சில்வா தெரிவித்தார். அப்லடொக்சின் திரவம் சிறுவர்களை அதிகளவில் பாதிக்கும் எனவும் அவர் கூறினார்.

அப்லடொக்சின் திரவம் கலக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்லடொக்சின் திரவம் புற்றுநோயை உருவாக்குவதாக பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்லடொக்சின் எனப்படும் திரவம் மூலமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து வினவியபோதே கலாநிதி அர்ஜுன டி சில்வா இதனை தெளிவுபடுத்தினார். அவர் மேலும் கூறுகையில்.

அப்லடொக்சின் திரவம் என்பது உணவுப்பொருட்களுக்கு ஒருபோதும் ஒவ்வாத ஒன்றாகும். எனினும் நீண்டகால பாவனைகளுக்கு இந்த வகையான திரவங்களை பயன்படுத்துகின்றனர்.

இந்த திரவமானது ஒரேடியாகவோ அல்லது சிறிது சிறிதாக நீண்ட காலமாக உடலுக்குள் செல்லுமாயின் அதனால் குடல் புற்றுநோய் ஏற்படும். வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாகும். அதுமட்டுமல்லாது அதிகளவில் அப்லடொக்சின் கலக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் வேளையில் வாந்தி, தலைச் சுற்று மற்றும் கண் பார்வையில் சிக்கல் நிலைமைகள் ஏற்படுவதை அவதானிக்க முடியும். அதேபோல் உடல் சக்தி குறைவும் ஏற்படும் என்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.