ஜெனிவா வாக்கெடுப்பு தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட தகவல்.

 ஜெனிவா வாக்கெடுப்பு தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட தகவல்.


ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவை வழங்கி வெற்றியடையச் செய்துள்ளன.

11 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன. எனினும் 14 நாடுகள் இதில் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர்,

வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 14 நாடுகளும் இலங்கைக்கு காட்டிய ஆதரவை பாராட்டுவதாக தெரிவித்தார்.

மேலும் ஐநாவில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கும் இவர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இதை பதிவிட்டுள்ளார்.

மேலும் ஜெனீவா அமர்வில் ஆணையாளரின் அறிக்கை அடிப்படியற்றது, அநீதி விடயங்கள் அடங்கியதாக முன்வைக்கப்பட்டதாக நாங்கள் முன்னர் தெரிவித்திருந்தோம்.

அதனையடுத்து முன்வைக்கப்படும் தீர்மானம் பேரவையில் சமர்பிக்கப்பட்டால் உறுப்பு நாடுகள் அதனை நிராகரிக்க வேண்டும் என்றும் இலங்கை சார்பாக கோரிக்கை விடுத்திருந்தோம்.

பிரித்தானியா கொண்டுவந்த தீர்மானம் மீது 47 நாடுகளிடையே 22 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டன. 25 வாக்குகள் பயன்படுத்தப்படவில்லை.

அவற்றில் 11 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததுடன், 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அந்த வகையில் 25 நாடுகளின் அனுமதியினை பலம்வாய்ந்த நாடுகளால் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.