பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான சாரதி யார்? நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு

 பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான சாரதி யார்? நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு



கொழும்பு மஹரகம பகுதியில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் இளைஞர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பொலிஸ் அதிகாரியால் கடுமையாக தாக்கப்பட்ட இளைஞர் அப்புத்தளையை சேர்ந்த 24 வயதான க.பிரவின் எனும் மலையக தமிழர் என தெரிய வருகிறது.

இவர் பண்டாரவளையில் இருந்து மரக்கறி வகைகளை லொறியில் ஏற்றி கொண்டு நேற்று (29) கொழும்பு வந்துள்ளார்.

அவரது லொறி நிலை தடுமாறி பாதையை விட்டு விலகிய போது அங்கே வீதி போக்குவரத்து கடமையில் இருந்த பொவிஸ் உத்தியோகஸ்தர் மீது லொறி கண்ணாடி உரசி இருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சாரதியை வாகனத்தில் இருந்து இழுத்து இறக்கி இருக்கிறார். அந்நேரம் அங்கு நின்ற ஆட்டோ சாரதி உடனடியாக லொறி சாரதியை தாக்க, பின்னர் பொலிஸ் உத்தியோஸ்தரும் தாக்கி இருக்கிறார்.

ஆனால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் தற்போது மஹரகம பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு தலை மற்றும் வயிறு வலிப்பதாக இவரை பார்க்க சென்ற அவரது நிறுவன பணிப்பாளரிடம் கூறியுள்ளார்.

எனினும் அவருக்கு இதுவரை மருத்துவ சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என அவர் தொழில் புரியும் அப்பே ஹார்த்திகேய நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாக்கிய குறித்த அதிகாரி பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

போலீசார் தாக்கும்போது , பொதுமக்கள் தமது உயிரை காப்பாற்ற தற்காப்பு நடவடிக்கை எடுக்க முடியும்.அஜித் ரோஹான.


 காவல்துறையை சேர்ந்த ஒருவர் கடமையில் இருக்கும்போது தனது அதிகாரங்களை தவறாகப்

பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்ட நிலையில் அவரால் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் உயிருக்கு ஆபத்தான தாக்குதலுக்கு ஆளாகும் போது , தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தற்காப்பு நடவடிக்கைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி) அஜித் ரோஹான தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரி தனது கடமையில் இருக்கும்போது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தினால் மட்டுமே பொதுமக்களால் தற்காப்பு வழிகளை பயன்படுத்த முடியும் என டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெளிவுபடுத்தினார். 

சட்டத்தின் படி, பொதுமக்கள் தங்களது உடல்நலம் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும், ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் இவ்வாறன சம்பவ நேரத்தில் நிராயுதபாணிகளாக உள்ளனர்.

நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானது, இது நியாயமான முறையில் செயல்படுத்தப்படும் என காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

நேற்று பன்னிப்பிட்டியில் வீதியின் நடுவில் ஒரு லாரி டிரைவரை காவல்துறை அதிகாரி தாக்குவது குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்தபோது டிஐஜி அஜித் ரோஹானா இதைக் குறிப்பிட்டுள்ளார்.

சாரதியை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.


பன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டுள்ளது. 

இதேவேளை தாக்கப்பட்ட லொறி ஓட்டுநரின் சாரதி உரிமம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் லொறி சாரதியை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவிவந்தமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.