நாடு முழுவதும் எரிவாயு (கேஸ்) தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.
நாடு முழுவதும் எரிவாயு (கேஸ்) தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.
இதனால், நுகர்வோருக்கு தேவையான எரிவாயுக்களை விநியோகிக்க முடியாத நிலைமைக்கு எரிவாயு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரலாற்றிலேயே எரிவாயுவின் விலை மிகவும் அதிகரித்த காலப் பகுதியாக இந்த மாதத்தின் முதல் வாரம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி, ஒரு மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 604 அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், இலங்கையிலுள்ள இரண்டு எரிவாயு நிறுவனங்களும், எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 750 ரூபாவிற்கும் அதிக நட்டத்தை எதிர்கொண்டு வருவதுடன், மாதமொன்றுக்கு இந்த இரண்டு நிறுவனங்களும் சுமார் 1.6 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கி வருகின்றன.
இதனால், எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான பணத்தை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்கு தற்போது இரண்டு எரிவாயு நிறுவனங்களும் தள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
நாட்டின் எரிவாயு கேள்வியை பூர்த்தி செய்துக்கொள்ளும் வகையிலான எரிவாயுக்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைமைக்கு இந்த நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாக த லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் உரிய தரப்பினர் இது தொடர்பில் கவனம் செலுத்த தவறும் பட்சத்தில், இலங்கையில் எரிவாயு விநியோகத்திற்கு பாரிய தட்டுப்பாடு நிலவும் சாத்தியம் எழுந்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.