குற்றச் செயல்கள், வாகன விபத்துக்களை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம்.

குற்றச் செயல்கள், வாகன விபத்துக்களை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம்.

குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதோடு, வாகன விபத்துக்களை குறைப்பதற்கும் விசேட வேலைத்திட்டமொன்றை பொலிசார் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

வாகன நெரிசல் காரணமாக கடுமையான காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இவற்றில் 75 வீதத்தை குறைத்துக் கொள்வதே இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும்.

தற்போது நாட்டில் மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்தில் 82 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சுமார் 60 இலட்சம் வாகனங்கள் தினமும் பயணிப்பதாகவும் கொழும்பு மோட்டார் போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இந்த வாகனங்களில் 46 லட்சம் மோட்டார் சைக்கிள்கள், 11 லட்சம் முச்சக்கர வண்டிகள். ஏனையவை கார்கள் மற்றும் வேன்கள் என்று கொழும்பு மோட்டார் போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டுகின்றது.

அத்துடன் இலங்கையில் ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 3000 பேர் வாகன விபத்துக்களால் இறக்கின்றனர். ஒரு நாளைக்கு 7 க்கும் 8க்கும் இடைப்பட்டவர்கள் இறப்பதுடன், கிட்டத்தட்ட 25 பேர் ஊனமுற்ற நிலைக்கு ஆளாகின்றனர்.

அதிகரிக்கின்ற வாகன விபத்துக்களின் மூலம் நாட்டின் தேசிய உள்நாட்டு வருமானத்தில் 1.5 சத வீதம் ஆண்டொன்றிற்கு செலவாகின்றது என்று மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவிக்கின்றார்.

மேலும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்க பொலிசார் மேற்கொள்ளும் முயற்சிக்கு ஈடாக வாகன விபத்துகளை குறைப்பதற்கும் பொலிசார் மேற்கொள்ளும் சேவை பலராலும் பாராட்டத்தக்கது.

அத்துடன் வாகன விபத்துகளை குறைப்பதற்காக தற்போது 'தேசிய கலந்துரையாடல்' ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மதுபோதை மற்றும் கவனயீனமாக வாகனம் செலுத்துபவர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வதிலும் பொலிசார் கவனம் செலுத்தியுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.