இஸ்லாத்தில் பெண்ணுரிமை

இஸ்லாத்தில் பெண்ணுரிமை.

மண்ணின் தாரகையாய் 

பேதையவள் உதித்த வேளை

போதை எனப் பொருள் கொடுத்து..!!

மங்கை இவள் பிறந்தாலே 

மண்ணிற்கு பரிசளிக்க...!!

மடையர் கூட்டம் அன்று மந்தை போல் கிளம்பியது....!!!

மனைவியவள் மானம் காக்க 

மறைந்து அவள் வாழ்ந்தாலும்...

தலைவன் எனும் பெயர் கொண்டு 

"விலை மாது" எனப் பெயர் கூட்டி 

விற்பனையில் விளையாடும் விலை பொருளாய் பெண் வாழ்க்கை மாறியது..!!

அன்பிற்கு ஏங்கியவளை அடிமை போல் சிறைப்படுத்தி...

இழிவு தரும் இன்னல்களை 

இதயமின்றி அழித்திடவே...

வலி அறிந்தும் வழி அறியா 

பிணைக்கைதி ஆகிய வேளை.....

மண்ணிற்கு முழு மதியாய்

மார்க்கமது துளிர் விடவே....

பெண்ணிற்கு பெயரே

பெண்மை எனும் மென்மை தான் என பெண்ணவளே அறியாது பாரிற்கு உணர்த்தியது..!!

மாதராய் நாம் இன்று 

மண்ணிலே புனிதம் பெற 

சிப்பிற்குள் முத்துப் போல் 

ஷரியாவின் சட்டத்தை மங்கைகாய் மாற்றியது...!!

விலை பொருளாய் வியாபாரமான விலை மாது எனும் பொம்மைகளை

வீட்டிற்குள் மிளிர வைத்து மகளிரை மதியாக மார்க்கத்தில் உயர்த்தியது...!!

அடுப்பறை மட்டும் அவளுக்கு அறையல்ல என..

கன்னிக்கு கல்வியினை;

விளையாட்டில் வீராங்கனையை உலகிற்கு உருமாற்றியது..!!

இகம் முழுதும் பெண்ணுரிமையை அனைவருக்கும் உணர்த்திடவே இஸ்லாத்தின் பெண்ணுரிமை அடிப்படையாய் விளங்கியது..!!

𝐒𝐇𝐈𝐌𝐀 𝐇𝐀𝐑𝐄𝐄𝐒

𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐏𝐞𝐫𝐚𝐝𝐡𝐞𝐧𝐢𝐲𝐚

𝐏𝐮𝐭𝐭𝐚𝐥𝐚𝐦,𝐊𝐚𝐫𝐚𝐦𝐛𝐞

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.