சுவீடனில் கத்திக்குத்து சம்பவம் - ஏழு பேருக்கு காயம்

 சுவீடனில் கத்திக்குத்து சம்பவம் - ஏழு பேருக்கு காயம்

சுவீடனில் இடம்பெற்றுள்ள கத்திக்குத்து தாக்குதலில் ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.சுவீடனின் வெட்லன்டாவில் இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நூறு மீற்றர் இடைவெளியில் இந்த கத்திக்குத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

வீதியில் நாங்கள் அலறல் சத்தத்தை கேட்டோம் அதன் பின்னர் நபர் தான் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக அலறியவாறு வணிகநிலையமொன்றிற்குள் நுழைந்தார் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவரது தோளில் இருந்து இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது நாங்கள் முதலுதவி வழங்கினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் இது கொலை முயற்சி என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதேவேளை பயங்கரவாத சம்பவமா என்ற அடிப்படையிலும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவரை சுட்டுக்கைதுசெய்துள்ளதாகவும் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.