கருத்தரிப்பதற்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்களுக்கு COVID தடுப்பூசி தடையாகுமா?

 கருத்தரிப்பதற்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்களுக்கு COVID தடுப்பூசி தடையாகுமா?


இலங்கையில் தற்போது வழங்கப்படும் AstraZeneca தடுப்பூசி கருத்தரிப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கு வழங்கப்படக் கூடாது எனும் தவறான தகவல் சமூக மட்டத்தில் பரவி வருகிறது. பெப்ரவரி 10 ம் திகதி உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின் அடிப்படையிலான அறிவித்தலின்படி , தடுப்பூசி வழங்கல் காரணமாக குழந்தையைப் பெற எதிர்பார்க்கும் பெண்கள் அதை ஒத்திவைக்க வேண்டிய எதுவித அவசியமில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தரவுகளின்படி, கர்ப்பிணித்தாய் சமவயதுள்ள கர்ப்பிணி அல்லாத பெண்களை விட COVID அதிக சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆதாரங்கள் முன் வைக்கப்படுகிறது. அவ்வாறே COVID நோயினால் பீடிக்கப்பட்டால் முதிராக் குழந்தைகளின் பிறப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதும் காணக் கிடைத்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், கர்ப்பத்தை எதிர்பார்க்கும் பெண்கள் இதுபோன்ற தவறான எண்ணங்களிற்கு ஆளாகி தடுப்பூசி போடுவதைத் தவிர்த்தால், தாய்மார்களின் வாழ்க்கையிலும், பிறக்கவுள்ள குழந்தையிலும் COVID-19 நோயால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைப்பதற்கான கிடைக்கக்கூடிய அரிய வாய்ப்பு அனியாயமாக நழுவி விடும்.

இத்தகைய துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை அனுமதிக்காமல் விஞ்ஞானரீதியாக சரியான உண்மைகளை சமூக மயமாக்குவதில் நீங்கள் வழங்கும் உறுதியான ஆதரவை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். இந்தஅறிவை உங்கள் நண்பர்களுடன் முன்பு போலவே முடிந்தவரை பகிர்ந்து கொள்ள கருணை கூருமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.