SMS தகவல் குறித்து தகவல் தொடர்பாடல் நிறுவனம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை.

 SMS தகவல் குறித்து தகவல் தொடர்பாடல் நிறுவனம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை.


பரிசுப் பொதிகளை வழங்குவதாகக் கூறி, கையடக்கத் தொலைபேசிகளுக்கு கிடைக்கப் பெறும் குறுந்தகவல்கள் (SMS) குறித்து அவதானமாக செயற்படுமாறு இலங்கை தகவல் தொடர்பாடல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, இது தொடர்பில் தமக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் தொடர்பாடல் நிறுவனததின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான போலி செய்திகளின் ஊடாக மக்களின் முக்கியமான தரவுகள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் ஊடுருவப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான போலி இணைப்புகளின் ஊடாக தனிப்பட்ட தரவுகளை திருடும் வகையில் மென்பொருள்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தொலைபேசிகளுக்கு கிடைக்கப் பெறும் இதுபோன்ற குறுந்தகவல்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு இலங்கை தகவல் தொடர்பாடல் நிறுவனம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.