53 ஆசனங்களைக்கொண்ட பஸ்ஸொன்றை செலுத்திய 15 வயது பாடசாலை மாணவன் கைது.

 53 ஆசனங்களைக்கொண்ட பஸ்ஸொன்றை செலுத்திய 15 வயது பாடசாலை மாணவன் கைது.

 


செல்லுப்படியாகும் உரி​மம் பத்திரம் இல்லாமல், 53 ஆசனங்களைக்கொண்ட பஸ்ஸொன்றை செலுத்திச்

சென்றதாகக் கூறப்படும் 15 வயதான பாடசாலை மாணவனை மித்தெனிய ​பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான அந்த பஸ்ஸை, தங்களுடைய வீட்டிலிருந்து மித்தெனிய நகரத்துக்கு செலுத்திக்கொண்டு வந்தபோதே இவ்வாறு அம்மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இம்முறை, கல்விப்பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சையில் தோற்றவிருக்கும் வயது குறைந்த ஒருவரை இவ்வாறு பஸ்ஸை செலுத்துவதற்கு அனுமதியளித்தமை தொடர்பில் பஸ்ஸின் உரிமையாளர் எனக் கூறப்படும் தந்தையை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.