எதிர்வரும் நாட்களில் பல பகுதிகள் முடக்கப்படும்? – இராணுவ தளபதி.

எதிர்வரும் நாட்களில் பல பகுதிகள் முடக்கப்படும்? – இராணுவ தளபதி.

𝑰𝑻𝑴▪️கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கின்ற பின்னணியில், தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என கொவிட் – 19 வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

𝑰𝑻𝑴▪️நாட்டில் தற்போது பரவி வரும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

𝑰𝑻𝑴▪️கொவிட் தொற்றாளர்கள் ஏதேனும் ஒரு பகுதியில் அதிகரிப்பார்களாயின், அந்த பகுதி முழுமையாக முடக்கப்படும் என அவர் கூறுகின்றார்.

𝑰𝑻𝑴▪️கொவிட் – 19 தடுப்புக்கான செயற்பாட்டு மையத்தினாலேயே, தனிமைப்படுத்தல் தொடர்பிலான தீர்மானங்களை எட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

𝑰𝑻𝑴▪️எனினும், எதிர்வரும் காலங்களில் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.