டெல்லி அணி வீரருக்கு கொரோனா.
டெல்லி அணி வீரருக்கு கொரோனா.
𝑰𝑻𝑴▪️டெல்லி கேபிடல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிக் நோர்க்கியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
𝑰𝑻𝑴▪️இவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுவிட்டு ஐபிஎல்லுகாக இந்தியா வந்துள்ளார்.
𝑰𝑻𝑴▪️இதனால், 7 நாள்கள் தனிமை முகாமிற்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.
𝑰𝑻𝑴▪️இந்நிலையில் தற்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.
𝑰𝑻𝑴▪️இதனால், அவர் மேலும் 10 நாட்களுக்குத் தனிமை முகாமில் இருக்க வேண்டும். அதன்பிறகு, மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டு, தொற்று உறுதியாக பட்சத்தில் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்.
𝑰𝑻𝑴▪️இவருடன் சக டெல்லி அணி வீரர்கள் தொடர்பில் இல்லாததால், டெல்லி அணிக்கு பெரும் சிக்கல் எதுவும் இல்லை.
𝑰𝑻𝑴▪️மேலும், ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுவதில் பாதிப்பு இருக்காது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
𝑰𝑻𝑴▪️டெல்லி அணியில் ஏற்கனவே அக்சர் படேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்பு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
𝑰𝑻𝑴▪️இந்நிலையில், இரண்டாவதாக ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அந்த அணி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
𝑰𝑻𝑴▪️டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
𝑰𝑻𝑴▪️முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 188/7 ரன்கள் அடித்த நிலையில், அடுத்துக் களமிறங்கிய டெல்லி அண 18.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை தோற்கடித்தது. ஓபனர்கள் பிரித்வி ஷா 72 (38), ஷிகர் தவன் 84 (54) அரை சதம் கடந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.