கொழும்பிலிருந்து செல்வோரின் கவனத்திற்கு! சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு.

 கொழும்பிலிருந்து செல்வோரின் கவனத்திற்கு! சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு.


தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தங்களின் சொந்த இருப்பிடங்களுக்குச் செல்பவர்களை இலக்காகக் கொண்டு எழுந்தமானமாக பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

வர்த்தக வலயங்களில் தொழில் புரிபவர்கள் மற்றும் கட்டுமான தொழில் புரிபவர்கள் உள்ளிட்ட குழுவினர் இதில் பிரதானமாக உள்ளடக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அதன் நிமித்தம் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் தொழில் புரிபவர்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வார்கள். குறிப்பாக வர்த்தக வலயங்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களே அதிகளவில் கிராம பகுதிகளுக்குச் செல்வர்.

இவர்களில் ஒருவருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்கள் மூலம் கிராமங்களில் வைரஸ் பரவக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது.

எனவே தான் இவர்களை இலக்காகக் கொண்டு பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.