இறக்குமதி தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் வேதிப்பொருள் உள்ளதாக மீண்டும் உறுதி.

 இறக்குமதி தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் வேதிப்பொருள் உள்ளதாக மீண்டும் உறுதி.


 மூன்று தனியார் நிறுவனங்களால் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் வேதிப்பொருள் அடங்கியுள்ளதாக மூன்றாவது முறையாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, குறித்த தேங்காய் எண்ணெய் தொகையை உடனடியாக மீள் ஏற்றுமதி செய்யுமாறு குறித்த நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவத்த தெரிவித்துள்ளார். 

மூன்று தனியார் நிறுவனங்களால் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோய் வேதிப்பொருள் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பரிசோதனையில் முதன்முறையாக உறுதிப்படுத்தப்பட்டது. 

பின்னர் குறித்த நிறுவனங்களுக்கு சொந்தமான கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

அதன்படி, அதன் முடிவுகள் நேற்று நுகர்வோர் விவகார சபைக்கு கிடைக்கப்பெற்றதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவத்த ​தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.