IDH வைத்தியசாலைக்கு ஒக்சிஜனின் தேவை அதிகரிப்பு – கொவிட் தொற்றாளர்களினால் நிரம்பியது IDH

 IDH வைத்தியசாலைக்கு ஒக்சிஜனின் தேவை அதிகரிப்பு – கொவிட் தொற்றாளர்களினால் நிரம்பியது IDH

𝑰𝑻𝑴▪️ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியில், வைத்தியசாலைக்கு ஒக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

𝑰𝑻𝑴▪️வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 20 கொவிட் தொற்றாளர்களுக்கு ஒக்சிஜன் வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஒக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதாக அறிய முடிகின்றது.

𝑰𝑻𝑴▪️ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு மேலதிகமாக, கொவிட் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

𝑰𝑻𝑴▪️120 நோயாளர்கள் மாத்திரமே அனுமதிக்க முடியும் என்ற நிலையில், ஐ.டி.எச் வைத்தியசாலையில் தற்போது 138 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

𝑰𝑻𝑴▪️அதேபோன்று, அவசர சிகிச்சை பிரிவில் உள்ள 8 கட்டில்களும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

𝑰𝑻𝑴▪️கடந்த சித்திரை புத்தாண்டின் பின்னரான காலத்தில், கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.