வரலாற்றில் இன்று – 10.05.2021 மே 10 கிரிகோரியன் ஆண்டின் 130 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 131 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன.
வரலாற்றில் இன்று – 10.05.2021
மே 10 கிரிகோரியன் ஆண்டின் 130 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 131 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன.
*இன்றைய தின நிகழ்வுகள்.*
👉கிமு 28 – சூரியப்புள்ளி சீனாவில் ஆன் வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டது.
👉70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு எருசலேம் மீது முழுமையான தாக்குதலை ஆரம்பித்தார்.
👉1497 – அமெரிகோ வெஸ்புச்சி புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தார்.
👉1503 – கொலம்பசு கேமன் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார்.
👉1534 – இழ்சாக் கார்ட்டியே நியூபவுண்டுலாந்து தீவை அடைந்தார்.
👉1612 – ஷாஜகான் மும்தாஜ் மகாலைத் திருமணம் புரிந்தார்.
👉1655 – இங்கிலாந்து எசுப்பானியாவிடம் இருந்து ஜமேக்காவைக் கைப்பற்றியது.
👉1688 – அயூத்திய இராச்சியத்தின் மன்னர் நாராய் தனது மகள் சுதாவதியை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.
👉1768 – மூன்றாம் ஜோர்ஜ் மன்னரைப் பெரிதும் விமர்சித்து எழுதிய ஜோன் வில்க்ஸ் என்பவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.
👉1773 – வட அமெரிக்க தேயிலை வணிகத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு ஏகபோக உரிமை அளிக்கும் தேயிலை சட்டத்தை பெரிய பிரித்தானியாவின் நாடாளுமன்றம் அமுல்படுத்தியது.
👉1774 – பதினாறாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
👉1796 – உருசியப்ப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டன.
👉1796 – பிரான்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியில் ஆத்திரியப் படைகளுக்கெதிரான போரில் பெரும் வெற்றி பெற்றான். 2,000 ஆஸ்திரியர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.
👉1824 – லண்டன் தேசிய அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
👉1837 – நியூயார்க் நகர வங்கிகள் செயலிழந்தன, வேலைவாய்ப்பின்மை பெருமளவில் அதிகரித்தது.
👉1849 – நியூயார்க் நகரில் மன்ஹாட்டனில் ஆஸ்டோர் ஒப்பேரா மாளிகையில் இரு நடிகர்களுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இடம்பெற்ற கலவரத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 120 பேர் காயமடைந்தனர்.
👉1857 – சிப்பாய்க் கிளர்ச்சி: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
👉1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் படைகளினால் ஜோர்ஜியாவில் கைது செய்யப்பட்டார்.
👉1871 – பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையிலான போர் பிரான்சு சரணடைந்ததை அடுத்து முடிவுக்கு வந்தது.
👉1877 – உருமேனியா உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
👉1908 – அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.
👉1922 – கிங்மன் பாறையை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியது.
👉1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி தவறுதலாக செருமானிய நகரான பிரைபர்கின் மீது குண்டுகளை வீசியது.
👉1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் செருமனி ஊடுருவியது.
👉1940 – நெவில் சேம்பர்லேன் பதவி துறந்ததை அடுத்து, வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
👉1940 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஐசுலாந்தினுள் ஊடுருவியது.
👉1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய வான்படையின் தாக்குதலில் லண்டனில் மக்களவை சேதத்துக்குள்ளாகியது.
👉1946 – சவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
👉1946 – அமெரிக்கா முதல்தடவையாக வி-2 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது.
👉1960 – அமெரிக்காவின் டிரைட்டன் புவியை கடலடியாக சுற்றி வந்த முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் என்ற சாதனையைப் பெற்றது.
👉1975 – சோனி நிறுவனம் பீட்டாமாக்சு என்ற காணொளி நாடாப் பதிப்பியை சப்பானில் வெளியிட்டது.
👉1979 – மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன.
👉1981 – பிரான்சுவா மித்தரான் பிரான்சின் முதலாவது சோசலிச அரசுத்தலைவராகத் தேர்த்நெடுக்கப்பட்டார்.
👉1993 – தாய்லாந்தில் விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் பெரும்பான்மையாக இளம் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
👉1994 – நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
👉1996 – எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலையேறிகள் உயிரிழந்தனர்.
👉1997 – ஈரானில் ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த 7.3 Mw அளவு நிலநடுக்கத்தில் 1,567 பேர் உயிரிழந்தனர், 2,300 பேர் காயமடைந்தனர்.
👉2005 – சியார்சியாவின் திபிலீசி நகரில் அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மீது கைக்குண்டு ஒன்று வீசப்பட்டது. ஆனாலும் அது வெடிக்கவில்லை.
👉2013 – மேற்கு அரைக்கோளத்தின் முக உயர்ந்த கட்டடம் என்ற பெயரை 1 உலக வர்த்தக மையம் பெற்றது.
❁ ════ ❃• 𝑰𝑻𝑴 •❃ ════ ❁
𝐀𝐃𝐌𝐈𝐍 : 𝐀𝐑𝐒𝐇𝐀𝐃 𝐓𝐇𝐀𝐇𝐈𝐑 𝐔𝐒𝐖𝐈
𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏
👇👇👇👇
https://chat.whatsapp.com/CbnfqUnQGHz26BKY2yh8Lk
https://chat.whatsapp.com/EpptvWILH3DDYyH6UbbaOL
https://chat.whatsapp.com/KjMSPEli8hI7xj7MvjynQ7
𝐅𝐁 𝐋𝐈𝐊𝐄 𝐏𝐀𝐆𝐄
👇👇👇
Https://www.facebook.com/110325207412634?referrer=whatsapp
𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄
👇👇👇
http://www.InternationalTamilMedia.com
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.