உடன் அமுலாகும் வகையில் நாட்டில் 12 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்.

 உடன் அமுலாகும் வகையில் நாட்டில் 12 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்.


𝑰𝑻𝑴▪️நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

𝑰𝑻𝑴▪️இதன்படி, 04 மாவட்டங்களுக்கு உட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️இதற்கமைய, கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பமுனுவ, ஹொன்னத்தர மற்றும் தெல்தர ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தின் குட்டிவில கிராம சேவகர் பிரிவும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

𝑰𝑻𝑴▪️அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லேகம, உடகம, புதிய நகரம், வலல்கொட, சுதுகல, பனமுர மற்றும் ரத்கம ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

𝑰𝑻𝑴▪️இதேவேளை, வவுனியா மாவட்டத்திற்கு உட்பட்ட குருக்கள்புதுக்குளம் கிராம சேவகர் பிரிவும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.