அமைச்சர் பந்துலவின் மற்றுமொரு நிவாரணப் பொதி! - நாளை முதல்.

 அமைச்சர் பந்துலவின் மற்றுமொரு நிவாரணப் பொதி! - நாளை முதல்.


𝑰𝑻𝑴▪️அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய ´சதொச நிவாரண பொதி - 2´ மே மாதம் முதல் 1000 ரூபாய் விலைக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

𝑰𝑻𝑴▪️கொழும்பில் நேற்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

𝑰𝑻𝑴▪️கடந்த நிவாரண பொதியை விட இம்முறை நிவாரண பொதியில் ஒரு கிலோ சம்பா மற்றும் ஒரு கிலோ நாட்டரிசி மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சதொச நிவாரண பொதி - 2 யில் உள்ளடங்கியுள்ள பொருட்கள்.

👉ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி

👉ஒரு கிலோ கிராம் நாட்டரிசி

👉ஒரு கிலோ கிராம் மாவு

👉ஒரு கிலோ கிராம் அவுஸ்திரேலியா சிகப்பு பருப்பு

👉ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனி

👉200 கிராம் நெத்தலி ( தாய்)

👉50 மில்லிலீற்றர் திரவ கிருமிநாசினி போத்தல்

👉முகக்கவசம் ஒன்று

👉100 கிராம் தேயிலை தூள்

👉50 கிராம் சோயா மீட் பெக்கெட் ஒன்று

👉100 கிராம் துண்டு மிளகாய்

அதன்படி, மே மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் இலங்கை பூராகவும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் இந்த நிவாரணப் பொதியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நிவாரணப் பொதியை பெற்றுக் கொள்ளும் நபர்களுக்கு *5 ரூபாய் விலைக்கழிவில் 400 கிராம் பால்மா பெக்கெட் ஒன்றினையும்* பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.