நாட்டில் சீரற்ற வானிலை ஆறு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை – மூவர் உயிரிழப்பு.

 நாட்டில் சீரற்ற வானிலை ஆறு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை – மூவர் உயிரிழப்பு.


𝑰𝑻𝑴▪️நாட்டில் நிலவும் சிரற்ற வானிலைக் காரணமாக 7 மாவட்டங்களை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கபட்டுள்ளனர்.

𝑰𝑻𝑴▪️இதன்படி, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் பாதிக்கபட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 

𝑰𝑻𝑴▪️ஆயிரத்து 385 குடும்பங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 119 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 

𝑰𝑻𝑴▪️665 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 810 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 

𝑰𝑻𝑴▪️325 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 123 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 

𝑰𝑻𝑴▪️270 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 115 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

𝑰𝑻𝑴▪️இதேவேளை, சீரற்ற வானிலைக்காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயணடைந்த நியைில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

𝑰𝑻𝑴▪️அத்துடன், நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலையால் 205 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️மேலும், 42 குடும்பங்களை சேர்ந்த 175 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

𝑰𝑻𝑴▪️இதேவேளை, நாட்டில் நிலவிவரும் சீரற்றவானிலைக் காரணமாக 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️இதன்படி, 

காலி மாவட்டத்தின் 

📌நியகம, 

📌நெலுவ, 

📌எல்ப்பிட்டிய, 

📌பத்தேகம, 

📌தவலம, 

📌நாகொடை மற்றும் 

📌யக்கலமுல்ல 

பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

அத்துடன், 

களுத்துறை மாவட்டத்தின்

📌பாலிந்தநுவர, 

📌அகலவத்த, 

📌வலல்லாவிட்ட, 

📌மதுகம, 

📌தொடங்கொட, 

📌இங்கிரிய,

📌புலத்சிங்கள, 

📌ஹொரன மற்றும் 

📌கேகாலை 

ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலகப்பிரிவுக்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் 

📌சீதாவாக்கை, 

கேகாலை மாவட்டத்தின்

📌 வரக்காபொல மற்றும், 

தெஹியோவிட்ட, 

இரத்தினபுரி மாவட்டத்தின்

📌எஹெலியகொடை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️மேலும், 

இரத்தினபுரி மாவட்டத்தின்,

📌எலப்பாத்த, 

📌அயகம, 

📌கலவான, 

📌குருவிட்ட, 

📌நிவித்திகல,

📌இரத்தினபுரி மற்றும் 

📌கிரியெல்ல 

ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️இந்த நிலையில், மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️இதேவேளை, நிலத்தில் வெடிப்பு உருவாகுதல், நிலம் தாழ் இறங்குதல், சுவர்களில் வெடிப்பு போன்ற விடயங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️அத்துடன், மரங்கள் முறிந்து விழுதல், மண்மேடு சரிதல், மின்கம்பங்கள் சரிதல் உள்ளிட்ட அனர்த்தங்களில் இருந்தும் பொதுமக்கள் பாதுகாப்பாக செயற்ப்பட வேண்டுமெனவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

❁ ════ ❃• 𝑰𝑻𝑴 •❃ ════ ❁

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.