சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மாற்றம்.

 சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மாற்றம்.


𝑰𝑻𝑴▪️சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நடத்தும் காலப்பகுதியில் திருத்தம் மேற்கொள்ளல் மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்யும் கால இடைவெளியை குறைத்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

𝑰𝑻𝑴▪️அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஆகஸ்ட்டிலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பரிலும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

𝑰𝑻𝑴▪️நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

𝑰𝑻𝑴▪️எதிர்வரும் காலங்களில் கீழ்க்காணும் வகையில் நடவடிக்கையெடுப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

👉 10 மற்றும் 11 ஆம் தரங்களின் பாடவிதானங்கள் ஒரு வருடமும் 09 மாதங்களும் கொண்ட காலப்பகுதிக்கு ஏற்றவாறு மீள்கட்டமைத்தல்.

👉 க.பொ.த சாதாரண தரம் பரீட்சை ஒகஸ்ட் மாதத்திலும், க.பொ.த (உயர் தரம்) பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கும் ஒவ்வொரு பரீட்சைகளின் பெறுபேறுகளையும் 03 மாதத்திற்குள் வெளியிடுவதன் மூலம் ஒட்டுமொத்த செயன்முறைக்காக தற்போது எடுக்கின்ற 45 மாத காலத்தை 32 மாதங்களாகக் குறைப்பதற்கும் அதற்குத் தேவையான தொழிநுட்ப ரீதியான ஏற்பாடுகளை தயாரித்தல்

👉 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள் பரிசீலனை செய்யும் செயன்முறை மூலம் பெறுபேறு அதிகரிக்கின்ற மாணவர்கள் இருப்பின் அவர்களுக்கான புதிய வெட்டுப்புள்ளி (இஸட் புள்ளி) வழங்குவதன் மூலம் குறித்த பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கல் மற்றும் குறித்த பொறிமுறையை 2020 தொடக்கம் நடைமுறைப்படுத்தல் போன்றவற்றுக்கு அமைச்சரவை அனுமதியுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.