வரலாற்றில் இன்று – 11.06.2021 ஜூன் 11 கிரிகோரியன் ஆண்டின் 162 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 163 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 203 நாட்கள் உள்ளன.

 வரலாற்றில் இன்று – 11.06.2021



ஜூன் 11 கிரிகோரியன் ஆண்டின் 162 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 163 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 203 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉1774 – அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்சில் இருந்து பிரெஞ்சு இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி யூதர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

👉1788 – ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.

👉1805 – மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.

👉1837 – பொஸ்டனில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.

👉1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.

👉1935 – அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சியில் அறிமுகப்படுத்தினார்.

👉1937 – சோவியத் ஒன்றியத்தில் எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

👉1938 – இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்: ஜப்பானியப் படைகளை எதிர் கொள்ள சீன அரசு மஞ்சள் ஆற்றை பெருக்கெடுக்க விட்டதில் 500,000 முதல் 900,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

👉1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் இத்தாலியில் ஜெனோவா மற்றும் டூரின் நகர்கள் மீது குண்டுகளை வீசின.

👉1940 – இரண்டாம் உலகப் போர்: மால்ட்டா மீது முதற் தடவையாக இத்தாலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.

👉1963 – தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.

👉1981 – ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் கொல்லப்பட்டனர்.

👉2002 – அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.

👉2004 – நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.

👉2007 – கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் 118 பேரும் தெற்கு சீனாவில் 66 பேரும் கொல்லப்பட்டனர்.


இன்றைய தின பிறப்புகள்


👉1838 – எம். சி. சித்திலெப்பை, தமிழறிஞர் (இ. 1898)

👉1908 – சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (இ. 1975)

👉1947 – லாலு பிரசாத் யாதவ், இந்திய அரசியல்வாதி

👉1957 – சுகுமாரன், தமிழகக் கவிஞர்.

👉1975 - சத்யன்,தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்.

👉1990 - ரோன் எத்தன் யோஹன், இந்திய திரைப்பட இசையமைப்பாளர்


இன்றைய தின இறப்புகள்.


👉1994 – அ. துரைராசா, பேராசிரியர், நாட்டுப்பற்றாளர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பி. 1934)

👉1995 – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தேசியத்தந்தை(பி. 1933)

👉1993 – லெப்டினண்ட் கேணல் சாள்ஸ், கடற்புலிகளின் தாக்குதற் படைத் தளபதியான ஆனந்தராசா தவராஜா (பி. 1960)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.