வரலாற்றில் இன்று – 14.06.2021 ஜூன் 14 கிரிகோரியன் ஆண்டின் 165 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 166 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 200 நாட்கள் உள்ளன.

 வரலாற்றில் இன்று – 14.06.2021


ஜூன் 14  கிரிகோரியன் ஆண்டின் 165 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 166 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 200 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉1789 – பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 கிமீ தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.

👉1800 – நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.

👉1807 – நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் போலந்தின் பிரீட்லாந்து என்ற இடத்தில் ரஷ்யப் படைகளுடன் மோதி வெற்றி பெற்றனர்.

👉1821 – வடக்கு சூடானின் சென்னார் பேரரசன் மன்னன் ஏழாம் பாடி என்பவன் ஒட்டோமான் பேரரசின் தளபதி இஸ்மயில் பாஷாவிடம் சரணடைந்ததன் மூலம் சென்னார் பேரரசு முடிவுக்கு வந்தது.

👉1846 – கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாவைக் குடியரசாக அறிவித்தனர்.

👉1872 – கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.

👉1900 – ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

👉1931 – பிரான்சில் சென் ஃபிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் இறந்தனர்.

👉1940 – இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியது.

👉1940 – போலந்தின் 728 போர்க் கைதிகள் நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமின் முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.

👉1941 – அனைத்து ஜெர்மனிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.

👉1941 – எஸ்தோனியர்கள், லாத்வியர்கள் மற்றும் லித்துவேனிய மக்கள் பலரை சோவியத் ஒன்றியம் நாட்டை விட்டு அவர்கள் பகுதிகளை விட்டு வெளியேற்றி வதைமுகாம்களுக்கு அனுப்பியது.

👉1962 – ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.

👉1967 – சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.

👉1967 – மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.

👉1982 – போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்ததை அடுத்து போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது.

👉1985 – TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.

👉1999 – தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.

👉2002 – கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.

👉   2003 – விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

👉2007 – காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது.


இன்றைய தின பிறப்புகள்.


👉1899 – யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற யப்பானிய எழுத்தாளர் (இ. 1972)

👉1928 – அ. வின்சென்ட், திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (இ. 2015)

👉1929 – சே குவேரா, சோசலிசப் புரட்சியாளர் (இ. 1967)

👉1962 - ஜெயப்பிரகாஷ்,இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.

👉1969 – ஸ்ரெஃபி கிராஃப், ஜெர்மனிய டென்னிஸ் வீராங்கனை.

👉1986 - பிந்து மாதவி,இந்திய தமிழ் திரைப்பட நடிகை .

👉1992 - ஷாலு ஷம்மு,தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகை.



இன்றைய தின இறப்புகள்.


👉   1965 – கந்தமுருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (பி. 1902)

👉2012 – காகா ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகர்.


இன்றைய தின சிறப்புகள்.


👉போக்லாந்துத் தீவுகள் – விடுதலை நாள்.

👉ஐக்கிய அமெரிக்கா – கொடி நாள்.

👉ஆப்கானிஸ்தான் – அன்னையர் நாள்.

👉உலக இரத்த வழங்கல் நாள்.

👉உலக வலைப்பதிவர் நாள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.