ஹஜ் புனித யாத்திரைக்கு 60,000 பேருக்கு மட்டுமே அனுமதிச.சவூதிஅரசு அறிவிப்பு.

 ஹஜ் புனித யாத்திரைக்கு 60,000 பேருக்கு மட்டுமே அனுமதிச.சவூதி அரசு அறிவிப்பு.

கொரோனா பெருந்தொற்று பரவலால், இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்’ என, சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் அரசு ஊடகத்தில் இன்று (ஜூன் 12) வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு

ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம். இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் மத்தியில் தொடங்கவிருக்கிறது.

தற்போது கொவிட் பெருந்தொற்று பரவலால், இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இந்த முடிவை ஹஜ் அமைச்சகமும், உம்ராவும் இணைந்து எடுத்துள்ளன.

கடந்த ஆண்டே, வெளிநாட்டிலிருந்து சவுதி அரேபியா சென்று வசித்து வந்த சில ஆயிரம் பேர் இந்த ஆண்டின் ஹஜ் புனித பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். – இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Sources:

https://www.aljazeera.com/news/2021/6/12/saudi-arabia-to-allow-60000-vaccinated-residents-to-perform-hajj

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.