நாளாந்தம் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம்.

 நாளாந்தம் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம்.உடனடி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளாமையே, நாளாந்த கொவிட் மரணங்களின் அதிகரிப்புக்கு காரணம் என சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர், விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவாந்துடாவ இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களில் 80 சதவீதமானவர்கள் பாரதூரமான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை.

20 சதவீதமானவர்களுக்கே அவ்வாறான நிலைமை ஏற்படுகிறது.

இவ்வாறு பாரதூரமான அறிகுறிகளைக் கொண்டுள்ள கொவிட் நோயாளர்களை உடனடியாக அடையாளம் காண வேண்டியது அவசியமாகும்.

 அவ்வாறு இல்லாத பட்சத்தில், குறித்த நோயாளர்களை குணப்படுத்துவது சிரமமாகும்.

எனவே, விரைவாக அவர்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.