இன்றும் நாளையும் தாதியர்கள் வேலைநிறுத்தம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இன்றும் நாளையும் தாதியர்கள் வேலைநிறுத்தம். 


பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்றும், நாளையும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தாதிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

எவ்வாறிருப்பினும், கொரோனா வைத்தியசாலைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் விசேட வைத்தியசாலைகள் என்பனவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். 

அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், அகில இலங்கை தாதியர் சங்கம் இன்றும், நாளையும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சங்கத்தின் செயலாளர் எஸ்.பி மெதிவத்த தெரிவித்துள்ளார்.

 தாதியர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில், சாதகமான முடிவுகள் கிடைக்காமை காரணமாக, சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் தாதியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடக குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.