June 14, 2021 at 04:19PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மீன்பிடி உபகரணங்களுக்கு நிர்ணய விலை - அமைச்சர் டக்ளஸ். மீன்பிடி உபகரணங்களுக்கு நிர்ணய விலை - அமைச்சர் டக்ளஸ் மீன்பிடித் துறைசார் உபகரணங்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். நீர்கொழும்பு மாநகர சபை மண்டப கேட்போர் கூடத்தில் நேற்று(13.06.2021) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட குறித்த சந்திப்பின் போது, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும் நீர்கொழும்பு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளினால் எடுத்துக்கூறப்பட்டது. குறிப்பாக, தரமற்ற வலைகளே சந்தைக்கு வருவதாகவும் குறித்த வலைகளை ஆறு மாதங்களை வரையிலயே பயன்படுத்தக் கூடியதாக இருப்பதனால் செலவீனங்கள் அதிகரிப்பதாக தெரிவித்தனர். அதேபோன்று, கடற்றொழில்சார் உபகரணங்களுக்கு நிர்ணய விலையின்மையினால் வியாபாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். கடற்றொழிலாளர்களின் ஆதங்கங்களைப் புரிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தரமான கடற்றொழில் சார் உபகரணங்கள் நியாயமான விலையில் சந்தையில் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சு அவதானம் செலுத்தும் என்று உறுதியளித்தார். மேலும், குறித்த விடயங்களை அமுல்ப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்ந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.