உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணையில் தீவிரம்..!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணையில் தீவிரம்..! 

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வர எதிர்க்கட்சி முயற்சித்து வருவதாக தெரிய வருகின்றது.

 அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தாலும், நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் பட்சத்தில், அரசாங்கத்திற்குள் காணப்படுகின்ற பிளவை வெளிகொணர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது. 

அத்துடன், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்பில மீது கோபம் கொண்டுள்ளதாகவும், இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சி பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சந்தர்ப்பத்தில், எரிபொருள் விலையேற்றத்தை மேற்கொண்டு, மேலும் மக்களை சிரமத்திற்கு உட்படுத்த செயற்பட்டமையை அடிப்படையாக வைத்து, இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.