பயணத்தடை நீடிப்பது தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 பயணத்தடை நீடிப்பது தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு.

நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை 21 ஆம் திகதி நீக்குவதா இல்லையா என்பது குறித்து 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொவிட் நிலைமை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு சற்று முன்னர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இணையவழியூடாக நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், கொவிட் பரவல் காரணமாக முழு உலகமும் ஸ்திரமான தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையிலேயே உள்ளன. இலங்கையிலும் அதே நிலைமையே ஏற்பட்டுள்ளது. 

எவ்வாறிருப்பினும் நாம் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடிய சூழல் நாட்டில் ஏற்பட வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றோம். எனினும், இவ்விடயம் தொடர்பில் உடனுக்குடன் தீர்மானிக்க முடியாது. அதற்கமைய நாட்டில் தற்போது காணப்படும் கொவிட் நிலைமை தொடர்பில் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் ஆராய்ந்து போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.