கேஸ் சிலிண்டர்களை பதுக்கினால் ‘1977’ இலக்கத்துக்கு முறையிடவும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 கேஸ் சிலிண்டர்களை பதுக்கினால் ‘1977’ இலக்கத்துக்கு முறையிடவும்.


சமையல் எரிவாயு சிலிண்டர்களை வியாபார நிறுவனங்கள் பதுக்கி வைத்தால் அது தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு முன்வைக்க முடியும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் என லாப் மற்றும் லிட்ரோ கேஸ் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. 

லாப் நிறுவனம் 740 ரூபாவால் அதிகரிக்குமாறும் லிட்ரோ கேஸ் நிறுவனம் 670 ரூபாவால் விலையை அதிகரிக்குமாறும் கோரியுள்ளதாக எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழு உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

இந்நிலையில் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் என்பதால் அதனை பதுக்கி வைக்கும் முயற்சியும் இடம்பெறுகின்றது. இந்நிலையிலேயே அது பற்றி முறைப்பாடு செய்ய இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.