இலங்கையில் சிறுவர்களை தாக்கும் புதிய நோய்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 இலங்கையில் சிறுவர்களை தாக்கும் புதிய நோய்! 

இலங்கையில் பூனை மற்றும் நாய்கள் மூலம் சிறுவர்களுக்கு டோக்ஸோகாரியாசிஸ் (toxocariasis) எனப்படும் புதிய நோய் தொற்றுவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். 

இதன்படி ,கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகளுடன் சிறுவர்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். பெரும்பாலும் பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் போன்ற சிறிய விலங்குகளின் உடலில் இந்த புழு உருவாகின்றது. 

இந்த விலங்குகளுடன் தொடர்பை பேணும் சிறுவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தோலில் புழுக்கள் ஏற்படும். இதன் ,பின்னர் அந்த புழுக்கள் குழந்தைகளின் கண்கள், மூளை மற்றும் நுரையீரலுக்குள் நுழைந்து கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார். 

கடந்த சில நாட்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் ,இதுபோன்ற வீட்டு விலங்குகளுக்கு மருந்து கொடுப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் மேலும் கூறினார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.