ஐ.நா. பொதுச்செயலாளராக அன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தெரிவு அன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 ஐ.நா. பொதுச்செயலாளராக அன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தெரிவு அன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



போர்த்துக்கல் முன்னாள் பிரதமரான அன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் 9ஆவது பொதுச்செயலாளராக அன்டனியோ-குட்டரெஸ் (72) கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் பதவி வகித்து வருகிறார். 

இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன. சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாள ராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந் நிலையில் ஐ.நா.வின் பொதுச்சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத் தில் அன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொதுச் செயலாள ராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடரும். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.