முட்டையின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 முட்டையின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்.


முட்டை உற்பத்தி செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள தடைகளால் வெகு விரைவில் முட்டை விலையை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 எரிபொருள் விலை அதிகரிப்பானது, முட்டை விநியோகஸ்தர்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதேபோல் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் யாவும் மீண்டும் திறக்கப்படுமாயின் தேவையானளவு முட்டையை விநியோகிக்க முடியாது போகும். 

முட்டைகளை 21 நாட்கள் காலப்பகுதிக்குள் சிறந்த முறையில், வைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், குறித்த காலப்பகுதியில் முட்டை விற்பனையும் இடம்பெறுவது அவசியமாகும். 

அப்படியில்லையாயின் ஏனைய செலவுகளை சமாளிப்பதற்கு முடியாமல் போகும். நாட்டின் தற்போதைய நிலையில், முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது - என்றுள்ளது.

 இதேவேளை, உற்பத்தி செலவு அதிகரிப்பால் கோழி இறைச்சியை கட்டுப்பாட்டு விலைக்கு வழங்க முடியாதிருப்பதாக கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.