கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து.

 கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து. 


கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருந்தால், தொடர் மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம் என சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அதுல் இன்கேல் மேற்படி கூறியுள்ளார்.

 அதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், ‘கொரோனாவில் இருந்து நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களுக்கு, ஆறு மாத காலத்திற்கு சிறுநீரக கோளாறு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சிறுநீரக கோளாறுகளில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. ஆறுமாதங்களுக்கு பின் பரிசோதனை செய்யும்போது டயாலிசிஸ் செய்ய வேண்டிய அளவுக்கான தீவிர பாதிப்பு நிலைக்கு சிலர் சென்றுவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மேலும் , நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம்’ எனத் தெரிவித்துள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.