15 நிமிடத்தில் 1 லட்சம் லைக்குகள்: ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

15 நிமிடத்தில் 1 லட்சம் லைக்குகள்: ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்.


நடிகர் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு Beast என பெயரிடப்பட்டு ஃப்ர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிபிறகு தளபதியின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்கப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

 கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான் விஜயின் அடுத்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியானவுடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

 அதன்பிறகு பெயரிடப்படாத விஜயின் 65-வது திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. அதன்பின் படப்பிடிப்பு முடிந்து படக்குழு இந்தியா திரும்புவதற்குள் கொரோனா வேகமாக பரவிய காரணத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது.

 இதனால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்த நிலையில் நாளை (ஜூன் 22) நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 படக்குழு சிறப்பான சர்ப்ரைஸ் ஒன்றை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

 அது தளபதி 65 திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் தான். "பீஸ்ட்"(Beast) என பெயரிடப்பட்டுள்ள அந்த திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட 15 நிமிடத்தில் 1 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது. 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.