விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடித்தால் 3ஆம் அலையைக் கட்டுப்படுத்தலாம்:

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடித்தால் 3ஆம் அலையைக் கட்டுப்படுத்தலாம்:


சுகாதார அமைச்சர. அதிகாரிகள் மற்றும் நாட்டு மக்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் கொவிட்-19 மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று தெரிவித்தார்.

 கொவிட் தடுப்பு செயலணி விதித்த சுகாதார வழிகாட்டல்களை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென சுகாதார அமைச்சர் அறிவுறுத்தினார். 

களுத்துறை வைத்தியசாலையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்ற பின் அவர் ஊடகங்களிடையே உரையாற்றினார். இது போன்ற கடும் தண்டனைகள் வழங்கப்படாவிடின் நாட்டைக் காப்பாற்றுவது கடினம் எனக் கூறிய அவர், இது தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்த பொலிஸ் மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து செயற்படும் என்றார்.

 “ஷொப்பிங் மால்களைத் திறக்க வேண்டும் எனக் கூறும் போது திறக்க முடியாது. இந்நாட்டை நாம் காப்பாற்ற முடியும். இந்நோயை ஒழிக்க முடியும் என நாம் நம்புகிறோம். முதல் மற்றும் இரண்டாம் கொவிட் அலைகளில் எங்களால் அதைச் செய்ய முடிந்தது.

 மூன்றாம் அலையை அடக்குவது கடினமான பணி அல்ல” என அமைச்சர் மேலும் கூறினார்..
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.