உடன் அமுலாகும் வகையில் பல பகுதிகள் முடக்கம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

உடன் அமுலாகும் வகையில் பல பகுதிகள் முடக்கம். 


திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அதன்படி , திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நாகராஜ வலவ்வ கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

 இதற்கமைய ,மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவின் முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்கு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காத்தான்குடி காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரிவு 4, காத்தான்குடி பிரிவு 5 தெற்கு, காத்தான்குடி பிரிவு 6 மேற்கு, புதிய காத்தான்குடி பிரிவு வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 மேலும் ,காத்தான்குடி காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட கர்பலா வீதி, ஏ.எல்.எஸ். மாவத்தை, நூரானியா பொது மயான வீதி மற்றும் கடற்கரை வீதி என்பனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.