ரணிலுக்கு அருகில் அமரமுடியாது - பிடிவாதம் பிடிக்கும் அநுரகுமார.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 ரணிலுக்கு அருகில் அமரமுடியாது - பிடிவாதம் பிடிக்கும் அநுரகுமார.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகில் பாராளுமன்றத்தில் அமர முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நேற்று வருகை தந்தார் அந்தநிலையில் , ரணில் விக்கிரமசிங்கவின் ஆசனம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அடுத்ததாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் , ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகில் அமர முடியாது என கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார் தனது ஆசனத்தை அத்துரலியே ரத்தன தேரர் அல்லது இரா. சம்பந்தன் ஆகியோரது ஆசனத்துக்கு அருகில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை கொடுத்துள்ளார் இல்லையெனில் ரணில் விக்கிரமசிங்கவின் ஆசனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அருகில் மாற்றுமாறும் யோசனை முன்வைத்துள்ளார். 

மேலும் ,இந்தநிலையில், எதிர்க்கட்சி வரிசையின் முன்வரிசையில் 13ஆவது ஆசனம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.