வடக்கில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
வடக்கில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று.


யாழ்ப்பாணத்தில் 34 பேர் உட்பட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 43 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ். 

போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளிலேயே இவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். 

யாழ். பல்கலைக்கழகத்தில் 337 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, 16 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, சண்டிலிப் பாயில் 12 பேரும், யாழ்ப்பாண மாநகரில் 4 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். 

யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்ட 590 பேரின் பி.சி.ஆர். முடிவுகளின்படி 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், சங்கானையில் 14 பேரும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் ஒருவருமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 18 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். 

மாந்தை மேற்கில் இருவர், நானாட்டானில் மூவர், மன்னார் பொது மருத்துவமனையில் இருவர் என மன்னார் மாவட்டத்தில் 7 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர். 

இதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும், வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.