ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான தபால் விநியோக வற்வரி கொள்கையில் ஜூலை 1 முதல் மாற்றம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான தபால் விநியோக வற்வரி கொள்கையில் ஜூலை 1 முதல் மாற்றம். 


ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பு நாடுகளுக்கு தபால் விநியோகம் தொடர்பாக செயற்படுத்தப்பட்ட வற் வரிக் கொள்கை எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் திருத்தப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் அரியரத்ன தெரிவித்தார்.

 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் (கடிதங்கள் தவிர) ஜூலை 1ஆம் திகதி முதல் வற் வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படவுள்ளது.


 அதன்படி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லட்வியா, லிதுவேனியா, லக்சம்பேர்க், மோல்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்கு இந்த வற் வரிக் கொள்கை செயற்படுத்தப்படும். 

மேற்படி ஐரோப்பிய ஒன்றிய வற்(VAT) கொள்கை இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுக்கு அனுப்பப்படும் சந்தை மதிப்பில் யூரோ 150க்கு குறைவான அஞ்சல் பொருட்களுக்குப் பொருந்தும். 

மேலும், யூரோ 150க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டின் VAT கொள்கைக்கு தொடர்புடைய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட பிற சுங்க விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும். எனவே, யூரோ 150க்கு மேல் உள்ள அஞ்சல் பொருட்களின் பொருந்தக்கூடிய அனைத்து சுங்க வரிகளும் அந்தக் குறிப்பிட்ட அஞ்சல் பொதியைப் பெறும் நபரிடமிருந்து வசூலிக்கப்படும். 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.