யாழ். நல்லூரில் விடுதி முற்றுகை ; இரு பெண்கள் உட்பட அறுவர் கைது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


யாழ். நல்லூரில் விடுதி முற்றுகை ; இரு பெண்கள் உட்பட அறுவர் கைது.

யாழ்ப்பாணம், நல்லூர் கோயில் வீதியில் கலாசாரச் சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றன என்று கூறப்படும் விடுதி ஒன்று யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று முற்றுகையிடப்பட்டது. 

இதன்போது, குறித்த விடுதி யிலிருந்து இரண்டு பெண் கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நல்லூர் கோயில் வீதியிலுள்ள விடுதியில் கலாசாரச் சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பொலிஸா ருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமைய, அந்த விடுதியைச் சோதனையிடு வதற்கான அனுமதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பெறப்பட்டது.

 இதையடுத்து யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நேற்று அந்த விடுதியைச் சுற்றி வளைத்து அங்கிருந்த இரண்டு பெண்கள் உட்பட 6 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

 கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் குருநகர், மானிப்பாய் மற்றும் உரும்பிராயைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

 வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேக நபர்கள் ஆறு பேரையும் வரும் ஜூலை 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.