அனுமதியின்றி செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 அனுமதியின்றி செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை.


மேல்மாகாண வர்த்தகர்கள்,பொதுமக்களுக்கான எச்சரிக்கை. மேல் மாகாணத்தில் வர்த்தகர்கள்,பொது மக்களை அனுமதியின்றி செயற்பட வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. 

மேல் மாகாணத்தில் அனுமதியின்றி செயற்பட்ட திரையரங்குகள்,உணவகங்கள், நீச்சல் தடாகங்கள், உள்ளிட்ட 313 இடங்கள் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது 605 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 காவல்துறையின் அனுமதியின்றி செயற்படுவோருக்கும்,சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறுவோருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார். 

குறிப்பாக வர்த்தகர்கள்,திரையரங்குகள்,விடுதிகள் என்பன சுகாதார துறையினரால் விடுக்கப்படும் அறிவித்தல்களுக்கு ஏற்பட செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கூட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. குறிப்பாக மேல் மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. எனவே பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற மறக்க வேண்டாம் என காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது. 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.